கூடலூர் அருகேமாந்தோப்புகளில் கரடிகள் அட்டகாசம்:விவசாயிகள் கவலை

கூடலூர் அருகே மாந்தோப்புகளில் புகுந்து கரடிகள் அட்டகாசம் செய்தவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2023-08-10 18:45 GMT

கூடலூர் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டிய பகுதியில் பளியன் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இங்கு பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். பளியன்குடி, நாயக்கர் தொழு, அம்மா புரம், புதுரோடு ஆகிய பகுதிகளில் அதிக அளவில் மாமரங்கள் உள்ளன. இதனை சுற்றி உள்ள வனப்பகுதியில் கரடி, காட்டுப்பன்றி, மான், குரங்குகள் என பல்வேறு வகையான விலங்குகள் வசிக்கின்றன.

இதில் கரடி, காட்டுப்பன்றி மற்றும் குரங்குகள் அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது. தற்போது இந்த பகுதியில் உள்ள மாமரங்களில் அதிக அளவில் மாங்காய்கள் காய்த்து தொங்குகின்றன. இதனால் தினமும் கரடிகள் கூட்டமாக வந்து மாங்காய்களை பறித்து தின்கின்றன. மேலும் ஏராளமான மாங்காய்களை பறித்து வீணாக்கி வருகிறது.

விளை பொருட்களை வீணாக்கி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். கரடிகளின் அட்டகாசத்தால் விவசாயிகள்இரவு நேர காவலுக்கு செல்லும் போது கையில் தீ பந்தங்களுடன் உலா வர வேண்டிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்