கயத்தாறு அருகே தொழிலாளி மீது தாக்குதல்

கயத்தாறு அருகே தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய தந்தை, மகனை போலீசார் தேடிவருகின்றனர்.;

Update:2023-07-15 00:15 IST

கயத்தாறு:

கயத்தாறு அருகே அகிலாண்டபுரம் காந்தாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த உத்தண்டம் மகன் ரவி (வயது 51). இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவரது ஆடுகள், அதேஊரைச் சேர்ந்த இந்திரா காலனி அய்யாத்துரை தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்துள்ளன. அப்போது அங்கு வந்த அய்யாத்துரையும், அவரது மகன் வேல்சாமியும் எங்கள் தோட்டத்திற்குள் ஆடு மேய்க்க வரக்கூடாது என்று ரவியை அவதூறாக பேசினார்களாம். பின்னர் அவரை உருட்டு கட்டையால் இருவரும் அவரை தாக்கிவிட்டு ஓடிவிட்டார்களாம். காயமடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்