கண்டமனூர் அருகேபஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் ஆபத்தான பயணம்

கண்டமனூர் அருகே பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.

Update: 2023-10-10 18:45 GMT

கண்டமனூர் அருகே தேக்கம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு தேனி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி முடிந்து மாலை நேரத்தில் கண்டமனூர் வழியாக தேனிக்கு போதுமான அளவில் பஸ் வசதி இல்லை. இதனால் மாலை நேரத்தில் தேனிக்கு செல்லும் அரசு பஸ்சில் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்து வருகின்றனர்.

மேலும் சில மாணவர்கள் பஸ்சில் இடம் கிடைக்காமல் பின்னால் உள்ள மேற்கூரைக்கு செல்லும் படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து காலை மற்றும் மாலை நேரங்களில் தேனியில் இருந்து கல்லூரி வரை கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்