திருக்கோவிலூர் அருகேவாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

திருக்கோவிலூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2023-01-04 19:00 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள வடகரைதாழனூர் கிராமத்தை சேர்ந்தவர் தில்லை கோவிந்தன் மகன் சண்முகம்(வயது 33). கடந்த சில தினங்களுக்கு முன்பு சண்முகம் பெங்களூரு செல்வதாக கூறி சென்றவர் அங்கு செல்லவில்லை. ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் சண்முகம் அரகண்டநல்லூரை சேர்ந்த சர்புதீன் என்பவரின் நிலத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சண்முகம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்