உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி மாணவன் பலி

உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி மாணவன் உயிாிழந்தான்.;

Update:2022-10-18 00:15 IST

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நல்லாலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவர் அதே கிராமத்தில் வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டில் அமிர்தலிங்கத்தின் 2-வது மகன் அறிவழகன்(வயது 9), தனது தந்தைக்கு உதவியாக சில வேலைகளை செய்து வந்துள்ளார், அப்போது எதிர்பாராதவிதமாக அறிவழகன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டதில் அவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்த புகாரின்பேரில் திருநாவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான அறிவழகன், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்