விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயம்

விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.;

Update:2023-07-21 00:15 IST

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள புதுசின்னையாபுரம் கிராமத்தில் காளியம்மன் கோவில் ஆடி பொங்கல் கொடை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது

இதில் சின்னமாடு பந்தயத்தில் 24 ஜோடிகளும், பூஞ்சிட்டு மாடு பந்தயத்தில் 13ஜோடிகளும் ஆக மொத்தமாக மதுரை, விருதுநகர், சிவகங்கை ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 37 ஜோடி மாடுகள் பந்தயத்தில் கலந்து கொண்டு வண்டிகளுடன் சீறிப்பாய்ந்தன.

பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர் மற்றும் சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இ்ந்த பந்தயத்தை விளாத்திகுளம் சுற்றுப்புறங்களிலுள்ள ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் குவிந்திருந்து மாடுகளை உற்சாகப்படுத்தி கண்டுகளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்