விருத்தாசலம் அருகே பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
விருத்தாசலம் அருகே பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.;
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த இருப்பு ஊராட்சிக்குட்பட்ட கிழக்கிருப்பு மற்றும் மேற்கிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆசிரியர் பயிற்றுநர் கனிமொழி கலந்து கொண்டு அரசின் நலத்திட்டங்கள், இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தல், எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், மாற்றுத் திறனாளி மாணவர்கள், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம் ஆகியவை குறித்துப் பேசினார். இதில் தலைமை ஆசிரியர்கள் திலகவதி, ராஜலட்சுமி மற்றும் ஆசிாியர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.