நூலகத்தில் புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றம்
நூலகத்தில் புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.;
பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்டம், தேசிய வாசிப்பு இயக்கம் இணைந்து புத்தகங்களோடு புத்தாண்டு என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. வாசகர் வட்ட தலைவர் மரிய சூசை தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கணபதி சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். தேசிய வாசிப்பு இயக்க தலைவர் தம்பான், எழுத்தாளர் நாறும்பூநாதன், நூலக கண்காணிப்பாளர் சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணைய கமிஷனர் சுகன்யா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். வாசிப்பின் அவசியம் குறித்து சிறுவர் எழுத்தாளர் சூடாமணி விளக்கி கூறினார். தொடர்ந்து புத்தனேரி செல்லப்பா தலைமையில் 'நெல்லைக்கு பெருமை சேர்ப்பது அன்றைய பழமையா? இன்றைய புதுமையா?' என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் பலரும் பங்கேற்று பேசினர். கவிஞர் முத்துசாமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சிசுந்தரம், முதன்மை நூலகர் வயலட் ஆகியோர் செய்து இருந்தனர்.