திருமணமான ஒரு வாரத்தில் தாலியை கழற்றி வைத்துவிட்டு காதலனுடன் சென்ற புதுப்பெண் - போலீசில் புகார்

தஞ்சை மாவட்டத்தில் திருமணமான ஒரு வாரத்தில் தாலியை கழற்றி வைத்துவிட்டு காதலனுடன் புதுப்பெண் மாயமானார்.;

Update:2022-07-01 09:34 IST

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த வெளிநாட்டில் வேலை செய்து வந்த ஒரு வாலிபருக்கும், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான ஒரு வாரத்தில் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அந்த புதுப்பெண் திடீரென எழுந்து கணவர் தனக்கு கட்டிய தாலியை வீட்டின் ஒரு பகுதியில் கழற்றி வைத்துவிட்டு திடீரென மாயமானார்.

காலையில் எழுந்த அந்த வாலிபர் தனது மனைவியை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அந்த வாலிபரின் தந்தை ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் மாயமான புதுப்பெண் திருமணத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததும், தற்போது நடந்த இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்து வந்ததும் இந்த நிலையில் கணவர் கட்டிய தாலியை கழற்றி வைத்து விட்டு தனது காதலனுடன் சென்றதும் தெரியவந்தது. அதன் அடிப்படையில் மாயமான புதுப்பெண்ணையும், அவரது காதலனையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்