'இயல்' வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் வேங்கடாசலபதி, சந்துருவுக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து

'இயல்' வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் வேங்கடாசலபதி மற்றும் சந்துருவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-19 12:35 GMT

சென்னை,

தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் வேங்கடாசலபதி மற்றும் முன்னாள் நீதிபதி சந்துரு ஆகியோருக்கு கனடா இலக்கியத் தோட்டத்தின் 'இயல்'- வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இவருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "ஆய்வாளர், பேராசிரியர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத் திறனாளரும்; தமிழ் - ஆங்கிலம் இரண்டிலும் தனித்த எழுத்துநடையைக் கொண்டவருமான ஆ.இரா.வேங்கடாசலபதி கனடா இலக்கியத் தோட்டத்தின் 'இயல்'- வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குத் தேர்வாகியிருப்பதற்கு எனது வாழ்த்துகள்!

'நானும் நீதிபதி ஆனேன்' என்ற தன்வரலாற்று நூலுக்காக புனைவிலிப் பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள முன்னாள் நீதியரசர் கே.சந்துருவுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

செந்தமிழைத் செழுந்தமிழாக்கும் படைப்புகளையும் ஆய்வுகளையும் தொடர்ந்து தருக!" என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.




Tags:    

மேலும் செய்திகள்