பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வினியோகம்

பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது;

Update:2023-08-28 00:15 IST

திருப்புவனம்

சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்புவனம் கிளை மற்றும் திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரி சித்தா பிரிவும் இணைந்து திருப்புவனம் நகர் பகுதியில் இரு இடங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முகமது ஹனிபா தலைமை தாங்கினார். திருப்புவனம் கிளை மருத்துவ அணி செயலாளர் காலித் முன்னிலை வகித்தார். சித்தா பிரிவு மருத்துவர் உமாராஜேஸ்வரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சுமார் 500 நபர்களுக்கு இலவசமாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருப்புவனம் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்