நீலகிரி: அதிகாலை நேரத்தில் ஊருக்குள் உலா வந்த சிறுத்தையால் மக்கள் பீதி

அதிகாலை நேரத்தில் ஊருக்குள் உலவி வரும் சிறுத்தையால், அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.;

Update:2023-02-23 23:59 IST

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரவேனு பெரியார் நகர் குடியிருப்பு என்ற பகுதி உள்ளது. இங்கு அதிகாலை நேரத்தில் சிறுத்தை ஒன்று அங்கும் இங்குமாக உலவி திரிந்துள்ளது.

சிறுத்தை நடமாடும் காட்சிகள் அங்கிருந்த ஒரு வீட்டின் முன் வைக்கப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதிகாலை நேரத்தில் ஊருக்குள் உலவி வரும் சிறுத்தையால், அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்