குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால்பொதுமக்கள் 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்தொழிலாளர் துறை அதிகாரி தகவல்

Update: 2023-05-29 19:00 GMT

நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் நாமக்கல் மாவட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறதா? குழந்தை தொழிலாளர் பணியாற்றுகின்றனரா? என ஆய்வு செய்தனர்.

இதில் 26 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 5 நிறுவனங்கள் அரசு நிர்ணயித்து உள்ள குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதில் முரண்பாடு கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பள நிலுவை தொகையை வழங்கக்கோரி 5 நிறுவனங்கள் மீதும் கேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ளது. குறைந்தபட்ச ஊதியம் வழங்காததது, கொத்தடிமை முறை ஒழிப்புக்கு மாறாக செயல்படும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 14 முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்துவது குற்றமாகும்.

அவ்வாறு பணியில் ஈடுபடுத்துவது கண்டறிந்தால், கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலும், அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரையிலும் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கநேரிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்துவதை பொதுமக்கள் கண்டறிந்தால் 1098 என்கிற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் திருநந்தன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்