பணியாளர்களை வெளியில் அழைத்து சென்றதாக புகார்

100 நாள் வேலையின்போது பணியாளர்களை வெளியில் அழைத்து சென்றதாக எழுந்த புகார் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.;

Update:2022-09-19 00:15 IST
சிவகங்கை ஒன்றிய பகுதிகளில் ஊரக வேலை உறுதி திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களில் திட்டப்பணிகளுக்கு வந்தவர்களை வேலை நேரத்தில் வெளியில் அழைத்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவின் பேரில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன் மற்றும் சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலர் ரத்தினவேல் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் ரத்தினவேல் கூறியதாவது:- சக்கந்தி ஊராட்சியில் பணியில் இருந்தவர்களை அழைத்து செல்லப்பட்டதாக வந்த புகார் குறித்து ஆய்வு செய்தோம். பணியில் இருந்ததாக பதிவு செய்யப்பட்டிருந்தவர்கள் பணியிடத்தில் இருந்தனர். அவர்கள் எண்ணிக்கை சரியாக இருந்தது. பணியில் இருந்தவர்கள் வெளியில் அழைத்து செல்லப்படவில்லை என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்