நெமிலி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு
நெமிலி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி ஆய்வு செய்தார்.;
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சயனபுரம், ஆட்டுப்பாக்கம், கீழ்வீதி, அரிகிலபாடி, மாங்காட்டுச்சேரி, காட்டுப்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பொது விநியோகக்கடை, அங்கன்வாடி கட்டிடம், சத்துணவு கூடம், பள்ளிக்கட்டிடங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள் கட்டும் பணியை பார்வையிட்டு, விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமன், பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர்.