சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.;

Update:2023-10-02 23:15 IST

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று கரூர் தேர்வீதியில் அமைந்துள்ள விஷ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி விநாயகருக்கு பால், பன்னீர், தயிர், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Tags:    

மேலும் செய்திகள்