கம்பத்தில்தென் மாவட்ட அளவிலான யோகா போட்டி

கம்பத்தில் தென் மாவட்ட அளவிலான யோகா போட்டி நடந்தது.

Update: 2023-10-15 18:45 GMT

தென் மாவட்ட அளவிலான யோகா போட்டி கம்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுகுமாரி தலைமை தாங்கினார். கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளி இணை செயலாளர் சுகன்யா காந்தவாசன் முன்னிலை வகித்தார். தேனி மாவட்ட யோகா பயிற்சியாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.

1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக 12 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தித்திப்பு ஆசனம், குக்டுராசனம், ஏகபாத சிக்கந்தாசனம், வாட்டியானாசனம், ஹனுமணாசனம், காலபைரவாசனம், கந்தர் ஆசனம், கருடாசனம், மயிலாசனம், பாதாசனம் உள்ளிட்ட 38 ஆசனங்களை செய்து காட்டி அசத்தினர்.

இந்த போட்டியில் கம்பம் புதுப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவியான மதுமதி கூர்மாசனம், சமகோண ஆசனம், ஹனுமன் ஆசனம் செய்தார். அப்போது தனது முதுகில் 70 கிலோ எடை கொண்ட தனது பயிற்சியாளரை நிற்க வைத்தார். மாணவியின் சாதனையை பார்த்த உதவி போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பார்வையாளர்கள் அவரை பாராட்டி பரிசு வழங்கினர். இதேபோல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. யோகா பயிற்சியாளர் ரவிராம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்