ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
கூடலூர் அருகே அரசு பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.;
கூடலூர்,
கூடலூர் அருகே கக்குண்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளியில் பல வண்ண மலர்களை கொண்டு அத்தப்பூ கோலம் இடப்பட்டது. மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பலவகை உணவு பதார்த்தங்களுடன் கூடிய ஓணம் விருந்து வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக கூடலூர் வட்டார கல்வி அலுவலர் பால் விக்டர் கலந்து கொண்டார். தலைமையாசிரியர் (பொறுப்பு) ராஜேஷ், பட்டதாரி ஆசிரியர்கள் அலீமா பேகம், எலியாஸ், ஸ்ரீகலா, அசிஸ், ராமராஜன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.