விவசாயி கொலையில் மேலும் ஒருவர் கைது

நெல்லை அருகே விவசாயி கொலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-08-07 00:48 IST

பேட்டை:

நெல்லை அருகே சுத்தமல்லி வ.உ.சி.நகர் 17-வது தெருவை சேர்ந்தவர் கொம்பையா (வயது 55). விவசாயியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கருத்தப்பாண்டி என்ற கண்ணன் (45), சுத்தமல்லியை சேர்ந்த இசக்கி பாண்டி (41), பேட்டையை சேர்ந்த மாரிபாண்டி (26), ஜான் டேனியல் (25) ஆகிய 4 பேரை சுத்தமல்லி போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக கருத்தபாண்டியின் மகன் சுரேஷ் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்