ராகுல்காந்தி பாதயாத்திரை ஓராண்டு நிறைவு: சிவகங்கையில் காங்கிரசார் ஊர்வலம்- முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பங்கேற்பு

ராகுல்காந்தி பாதயாத்திரை ஓராண்டு நிறைவைெயாட்டி சிவகங்கையில் நடந்த காங்கிரசார் ஊர்வலத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.;

Update:2023-09-10 00:30 IST

ராகுல்காந்தி பாதயாத்திரை ஓராண்டு நிறைவைெயாட்டி சிவகங்கையில் நடந்த காங்கிரசார் ஊர்வலத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.

ராகுல்காந்தி ஓராண்டு நிறைவு

ராகுல் காந்தி இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை சென்று ஓராண்டு நிறைவையொட்டி சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.

சிவகங்கை கோர்ட்டு வாசலில் இருந்து மாவட்ட காங்கிரஸ் தலைவர் சஞ்சய் காந்தி தலைமையில் ஊர்வலம் தொடங்கியது.

ஊர்வலத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம், காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. மாங்குடி, மாவட்ட துணை தலைவர் சண்முகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தனர்.

கலந்து கொண்டவர்கள்

இதில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஆரோக்கிய சாந்தாராணி, மாநில மகளிர் காங்கிரஸ் துணைத்தலைவி ஸ்ரீவித்யா கணபதி, மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி இமய மடோனா, நகர்மன்ற உறுப்பினர்கள் மகேஷ் குமார், விஜயகுமார், வட்டார தலைவர்கள் மதியழகன், உடையார், வேலாயுதம், பொதுக்குழு உறுப்பினர் சோனை, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரவீன் குமார், சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுக ராஜா. மற்றும் மோகன்ராஜ், வெள்ளைச்சாமி, சிதம்பரம், பழனிச்சாமி உள்பட கலந்து கொண்டனர்.

ஊர்வலம் முக்கிய வீதி வழியாக சென்று சிவகங்கை பஸ் நிலையத்தை சென்றடைந்தது. அங்கு சுபாஷ் சந்திர போஸ், மகாத்மா காந்தி, வேலு நாச்சியார், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோர் மாலை அணிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்