திராவகம் குடித்த பெயிண்டர் சாவு

திராவகம் குடித்த பெயிண்டர் இறந்தார்.;

Update:2023-03-08 01:14 IST

திருவானைக்காவல் நரியன்தெருவில் வசித்து வந்தவர் மூர்த்தி (வயது 59) பெயிண்டர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் வீட்டில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி குடிபோதையில் மூர்த்தி திராவகத்தை குடித்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலன்இன்றி இறந்தார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்