லஞ்சம் பெற்ற பல்லாவரம் சார்பதிவாளர் கைது - லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பல்லாவரம் சார்பதிவாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Update: 2023-03-29 16:07 GMT

சென்னை,

சென்னை குரோம்பேட்டையில் பல்லாவரம் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சார்பதிவாளராக பணியாற்றி வரும் செந்தில்குமார் என்பவர் பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் பத்திரப்பதிவு செய்ய வந்த ஒரு நபர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் செந்தில்குமார் தன்னிடம் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக புகார் தெரிவித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த நபரிடம் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை சார்பதிவாளரிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.

அதன்படி இன்று அந்த நபர் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை இடைத்தரகர் மூலமாக சார்பதிவாளர் செந்தில்குமாரிடம் கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர்.

மேலும் அவருக்கு பணம் வாங்கித் தரும் பொறுப்பில் இருந்த இடைத்தரகர் சிவா என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்