மழைநீர் ஒழுகிய அரசு பஸ்சில் குடைபிடித்து சென்ற பயணிகள்
மழைநீர் ஒழுகிய அரசு பஸ்சில் பயணிகள் குடைபிடித்து சென்றனர்.;
வந்தவாசி
மழைநீர் ஒழுகிய அரசு பஸ்சில் பயணிகள் குடைபிடித்து சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மருவத்தூரிலிருந்து, வந்தவாசி, செய்யாறு, ஆற்காடு வழியாக வேலூருக்கு (தடம் எண் 200) அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சின் மேற்கூரை ஓட்டை உடைசலுடன் காணப்படுகிறது. இந்த நிலையில் வந்தவாசி பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது.
அப்போது ப்சில் மழைநீர் ஒழுகியது. பஸ்சில் வந்த பயணிகள் ஓட்டை, உடைசலான பஸ்சை ஏன் ஓட்டுகிறீர்கள் என கேட்டு திட்ட தொடங்கினர். பலர் மழையில் நனைந்தவாறு பயணம்செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
சிலர் குடை பிடித்துக்கொண்டு பயணம் செய்தனர். போக்குவரத்து கழக நிர்வாகம் அரசு பஸ்களை முறையாக பராமரிப்பு செய்யாத காரணத்தால் இது போன்ற நிலை ஏற்படுகிறது. இனி மழைக்காலம் தொடங்க உள்ளது. அதுபோன்ற காலங்களில் இதுபோன்ற பஸ்களை இயக்கினால் பயணிக் பாடு திண்டாட்டமாகி விடும். குழந்தைகளுடன் வருபவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே பழுதுகளை சரி செய்து பஸ்சை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.