படவேடு தாமரை ஏரி நிரம்பியது

தொடர் மழையால் படவேடு தாமரை ஏரி நிரம்பியது

Update: 2022-11-25 16:10 GMT

கண்ணமங்கலம்

கடந்த வாரம் முதல் பெய்து வரும் தொடர் மழையால் படவேடு பகுதியில் உள்ள தாமரை ஏரி கடல் போல நிரம்பி வருகிறது.

கடந்த 25 ஆண்டுகளாக தாமரை ஏரி நிரம்பாமல் தண்ணீர் வரத்து கால்வாயில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் இருந்து வந்தது.

இந்த நிலையில் புதூர் பகுதியில் தாமரை ஏரிக்கு வரும் கால்வாயை சீரமைத்து வழி நெடுகிலும் சுமார் 5 கிலோ மீட்டா் தூரம் நீர்வரத்து கால்வாயை பொக்லைன் மூலம் சீரமைத்தனர்.

இதனால் கடந்த ஆண்டு தாமரை ஏரி நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டது. அப்போது கிராமமக்கள் சிறப்பு பூஜை செய்து, 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து இந்த ஆண்டும் பெய்த மழையில் தாமரை ஏரிக்கு வரும் கால்வாயில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் 2-வது ஆண்டாக ஏரி நிரம்பி கடல் போல காட்சி அளிக்கிறது.

விரைவில் படவேடு ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் விரைவில் சிறப்பு பூஜை செய்து உபரிநீர் திறக்கப்பட உள்ளது என படவேடு பகுதியில் வசிக்கும் பிரமுகர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்