அடகு வைத்த நகைகள் மாயம்; மீட்டு தரக்கோரி விவசாயிகள் ேபாராட்டம்

கீழப்பசலை கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்த நகைகள் மாயமானது. அதை மீட்டு தரக்கோரி விவசாயிகள் ேபாராட்டம் நடத்தினர்.

Update: 2022-09-26 18:45 GMT

மானாமதுரை, 

மானாமதுரை அருகே கீழப்பசலை கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளின் அடகு வைத்த நகைகள் மாயமானதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சங்கத்தில் பணியாற்றிய கம்ப்யூட்டர் ஆபரேட்டர், சங்க செயலாளர் ஆகிய 2 பேரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். விவசாயிகளும் தொடர்ந்து அடகு வைத்த நகைகளை மீட்டு தரக்கோரி கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு வந்தனர்.

இதனால் கடந்த 3 மாத காலமாக கூட்டுறவு சங்கம் பூட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கூட்டுறவு சங்கம் திறந்து செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மானாமதுரைக்கு மண்டல இணை பதிவாளர் ஜீனு, கூட்டுறவு சார்பதிவாளர் ஆகியோர் அரசு காரில் கூட்டுறவு சங்கத்திற்கு வந்திருந்தனர்.

இதை அறிந்த கீழப்பசலையைச் சேர்ந்த அர்ஜுனன் தலைமையில் விவசாயிகள் அவரது காரின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர். அடகு வைத்த நகைகளை திரும்ப வழங்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தெரிவித்தனர். அவர்களிடம் மண்டல இணை பதிவாளர் ஜீனு பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் அடகு வைத்த நகைகள் திரும்ப ஒப்படைக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்