ஓடை புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி மரம் வெட்டியவருக்கு ரூ.7 ஆயிரம் அபராதம்

ஓடை புறம்போக்கு இடத்தில் இருந்த மரத்தை அனுமதியின்றி வெட்டியவருக்கு ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.;

Update:2023-07-12 00:11 IST

ஆத்தூர்

ரம் வெட்டப்பட்டது

ஆத்தூர் நகராட்சி 25-வது வார்டு கண்ணாடி மில் அருகே முனியப்பன் கோவில் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் சிங்காரவேலன் (வயது 50). இவர் முனியப்பன் கோவில் அருகே உள்ள ஓடையில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் இருந்த புங்கன் மரத்தை வெட்டி விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஆத்தூர் தாசில்தார் மாணிக்கத்திற்கு புகார் சென்றது. இதைத்தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

அபராதம்

இதில் அரசு புறம்போக்கு இடத்தில் இருந்த மரம் வெட்டப்பட்டதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதையடுத்து அந்த மரத்தை அனுமதியின்றி வெட்டியதாக சிங்கார வேலனுக்கு ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து தாசில்தார் மாணிக்கம் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்