அரூர் பகுதியில் அலுவலர்கள் சோதனை:110 வாகனங்களுக்கு ரூ.4½ லட்சம் அபராதம்

Update:2023-06-06 11:15 IST

அரூர்:

அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் மற்றும் அலுவலர்கள் அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, சாமியாபுரம் கூட்ரோடு, மஞ்சவாடி கணவாய் ஆகிய இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஒரு மாதத்தில் 269 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. அப்போது சரக்கு வாகனத்தில் ஆட்கள் ஏற்றி வந்தது. அதிக பாரம் ஏற்றி வண்டிகள், அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் உள்ளிட்ட 110 வாகனங்களுக்கு மொத்தம் ரூ.4 லட்சத்து 59 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. முறையான ஆவணம் இல்லாத 22 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்