பெத்தநாயக்கனூர் அரசு பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற நிறைவு விழா
பெத்தநாயக்கனூர் அரசு பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற நிறைவு விழா;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத்தின் நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இதில் குழந்தைகளை மகிழவைக்கும் கதை சொல்லல் நிகழ்வாக நடந்தது. இந்த நிகழ்வில் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த கதை சொல்லி பூங்கொடி பாலமுருகன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு கதைகளைக் கூறினார். இயற்கையை நேசித்தல், பறவைகளின் கதைகள் என பல கதைகளை குழந்தைகளுக்கு கூறப்பட்டது. எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய பேய் கதையை சிறுவயது எழுத்தாளர் ஸ்ரீராம் கூறினார். மேலும், குழந்தைகளை கதை சொல்லச் சொல்லி உற்சாகப்படுத்தினார். கதை கூறிய அனைத்து குழந்தைகளுக்கும் சிறார் நூல்களைப் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமைஆசிரியை உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். முடிவில் ஆசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார். விழாவில் ஆசிரியர்கள், பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.