மயானத்தில் தகன மேடை அமைத்துத்தர வேண்டும்; திராவிடத் தமிழர் கட்சியினர் கோரிக்கை

மயானத்தில் தகன மேடை அமைத்துத்தர வேண்டும்; திராவிடத் தமிழர் கட்சியினர் கோரிக்கை;

Update:2022-09-13 03:15 IST

ஈரோடு

திராவிடத் தமிழர் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமையில் மாநில துணை பொதுச்செயலாளர் முருகேசன், மகளிர் அணி தலைவி சரண்யா மற்றும் நிர்வாகிகள், மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி காலனியில் சுமார் 1,500 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். சென்னம்பட்டிக்கு உள்பட்ட மயானத்தில் சரியான தகன மேடை இல்லை. இதனால், மழைக்காலங்களில் சடலங்களை எரிப்பதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, சென்னம்பட்டி காலனியில் உள்ள மயானத்தில் தகன மேடை அமைத்துத்தர ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்