காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update:2025-12-10 14:27 IST

பஞ்சபூத தலங்களில் நிலத்துக்குரிய காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவிலில் இரண்டரை ஆண்டுகளாக திருப்பணிகள் நடத்தி முடிக்கப்பட்டு நேற்று முன்தினம் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழா நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து ஏலவார் குழலிக்கும் ஏகாம்பரநாதருக்கும் திருக்கல்யாண உற்சவம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி உபயதாரர்கள் சீர்வரிசை, பிரமாண்ட மலர் மாலைகள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக உற்சவ மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டது.

தொடர்ந்து ஏகாம்பரநாதருக்கும், ஏலவார்குழலி அம்மனுக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பட்டாடைகள் உடுத்தி வைர வைடூரிய நவரத்தின திருவாபரணங்கள் அணிவித்து பிரமாண்டமான மல்லிகைப்பூ, ரோஜா பூ, சாமந்திப்பூ, விரிஞ்சு பூ உள்ளிட்ட மலர்களால் ஆன பிரம்மாண்ட மலர் மாலைகள் சூட்டி திருமண கோலத்தில் எழுந்தருள செய்தனர்.

இதை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாள நாதஸ்வர வாத்தியங்கள் இசைக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் ஏலவார் குழலி அம்மனுக்கும், ஏகாம்பரநாதருக்கும் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்