அடிப்படை வசதிகள் கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

அடிப்படை வசதிகள் கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.;

Update:2023-10-04 00:23 IST

கலெக்டர் அலுவலகத்தில் மனு

அரியலூர் மாவட்டம், சோழமாதேவி ஊராட்சியில் உள்ள குறிச்சி கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

நாங்கள் குறிச்சி கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பத்தினர் உள்ளனர். ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் 3 முதல் 5 குடும்பங்கள் வரை வசித்து வருகிறோம். இதனால் போதுமான இடவசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம்.

அடிப்படை வசதி வேண்டும்

எனவே மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து எங்கள் கிராமத்தில் உள்ள குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் சரிவர செய்து தரப்படவில்லை. இதனால் பல சமயங்களில் அவதிப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே அடிப்படை வசதிகள் செய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்