நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம்

கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.;

Update:2022-07-04 20:09 IST

கடையநல்லூர்:

கடையநல்லூர் அண்ணாமலை நாதர் கோவில் தெப்பம் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

இந்து முன்னணி நகர பார்வையாளர் சிவா தலைமையில் நடைபெற்ற மனு கொடுக்கும் போராட்டத்தில், பா.ஜ.க. நகர தலைவர் சுப்பிரமணியன், துணை தலைவர் காளிராஜ், இந்து முன்னணி நிர்வாகிகள் பால்ராஜ், தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையொட்டி கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்