பெட்ரோல் விற்றவர் கைது
திண்டிவனம் அருகே பெட்ரோல் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.;
திண்டிவனம்,
திண்டிவனம் அடுத்த நொளம்பூர் பகுதியில் ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ராசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் விதிமுறைகளை மீறி பெட்ரோலை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து பெட்ரோல் விற்பனை செய்தது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் பெட்ரோலும் பறிமுதல் செய்யப்பட்டது.