குடிசைகளை அகற்றக்கோரி மறியல்

வத்தலக்குண்டு அருகே குடிசைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update:2022-08-30 19:57 IST

வத்தலக்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டு சென்றாய பெருமாள் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள நிலத்தை சிலர் ஆக்கிரமித்து குடிசைகள் அமைத்துள்ளனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அந்த குடிசைகளை வருவாய்த்துறையினர் அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில் குடிசைகளை அகற்றக்கோரி, பழைய வத்தலக்குண்டு பிரிவு அருகே  அப்பகுதி மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். மறியல் காரணமாக அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்