ஏ.வி.எம்.சரவணன் நினைவேந்தல் நிகழ்ச்சி - மு.க.ஸ்டாலின், ரஜினி, கமல் பங்கேற்பு
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் ஏ.வி.எம்.சரவணன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.;
சென்னை,
ஏ.வி.எம். நிறுவனத்தின் உரிமையாளரும், பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.வி.எம்.சரவணன் கடந்த டிசம்பர் 4-ந்தேதி காலமானார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி, புதுச்சேரி அரசின் சிகரம் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில், ஏ.வி.எம்.சரவணன் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.வி.எம். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மறைந்த ஏ.வி.எம்.சரவணன் உருவப்படத்தை திறந்து வைத்தார்.
படத்திறப்பு நிகழ்வில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு, ஏ.வி.எம்.சரவணன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.