ஏ.வி.எம். சரவணனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
எங்கள் குடும்ப நண்பராக மாசற்ற அன்பு பாராட்டிய ஏ.வி.எம். சரவணனுக்கு என் புகழஞ்சலி என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருபதாவது;-
சிகரங்களைத் தொட்டபோதும் simplicity-யே தன் அடையாளம் என வாழ்ந்த 'உயர்ந்த உள்ளம்' ஏ.வி.எம். சரவணன்!
உடையால் மட்டுமல்ல, உள்ளத்தாலும் தூய்மையானவராக வாழ்ந்து காட்டிய சாதனையாளர்தான் ஏ.வி.என் சரவணன். தந்தை சம்பாதித்த பெயரைக் காப்பாற்றிய மகனாக, அனைத்துத் தரப்பினரின் நம்பிக்கையைப் பெற்ற தயாரிப்பாளராகத் தமிழ்த் திரையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் என்றும் போற்றுதலுடன் நினைவுகூரப்படும்!
எங்கள் குடும்ப நண்பராக மாசற்ற அன்பு பாராட்டிய ஏ.வி.எம். சரவணனுக்கு என் புகழஞ்சலி!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.