சோழேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி

மன்னார்குடி சோழேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடந்தது.;

Update:2022-11-27 00:15 IST

மன்னார்குடி:

மன்னார்குடி சிவனடியார் திருக் கூட்டம் மற்றும் தேசிய மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் இணைந்து பட்டக்காரத்தெரு சோழேஸ்வரர் கோவிலில் நேற்று உழவாரப்பணி மேற்கொண்டனர். திருக்கூட்ட புலவர் குடவாசல் ராமமூர்த்தி உழவாரப்பணியைத் தொடங்கி வைத்தார். என்.எஸ்.எஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என். ராஜப்பா முன்னிலை வகித்தார்.முன்னதாக திட்ட அலுவலர் கமலப்பன் வரவேற்றார். சிவனடியார்கள் மற்றும் என்.எஸ்.எஸ் மாணவர்கள் கோவிலின் கிழக்கு கோபுரவாசல் மற்றும் தெற்கு பகுதி கோபுரவாசல் ஆகிய இடங்களில் இருந்த செடிகள் ஆகியவற்றை அகற்றி சுத்தம் செய்தனர்.மேலும் அனைத்து சன்னதிகளிலும் தூய்மை பணி மேற்கொண்டனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்