போக்குவரத்துக்கு இடையூறாக வாகனம் நிறுத்தியவர்களுக்கு நூதன தண்டனை; கடிதம் எழுதி வாங்கிய காவல்துறை

போக்குவரத்துக்கு இடையூறாக நின்று கொண்டிருந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு போக்குவரத்து போலீசார் நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.;

Update:2023-02-17 17:38 IST

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களின் உரிமையாளர்களுக்கு போக்குவரத்து போலீசார் நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.

அதன்படி, 'இனிமேல் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்த மாட்டோம்' என அவர்கள் கைப்பட கடிதத்தை போக்குவரத்து போலீசார் எழுதி வாங்கினர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்