விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீஸ் அணிவகுப்பு

மயிலாடுதுறையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நடைபெற்ற போலீஸ் அணிவகுப்பை போலீஸ் சூப்பிரண்டு மீனா கொடியடைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2023-09-14 18:45 GMT

தமிழகத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தி மறுநாள் ஊர்வலமாக எடுத்துச்சென்று விநாயகர் சிலைகளை துலாக்கட்ட பகுதியில் காவிரி ஆற்றில் கரைப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வருகிற18-ந் தேதி (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி மயிலாடுதுறையில் விநாயகர் சதுர்த்தி விழா எந்தவித அசம்பாவிதமும் இன்றி சிறப்பாக நடத்துவதற்காக மயிலாடுதுறை போலீசார் நேற்று அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்பை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த அணிவகுப்பு கிட்டப்பா அங்காடியில் இருந்து புறப்பட்டு காந்திஜி ரோடு, பட்டமங்கலத் தெரு, டவுன் விரிவாக்கம் வழியாக சென்று மீண்டும் கிட்டப்பா அங்காடியை வந்தடைந்தது. இந்த அணிவகுப்பில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்