புள்ளம்பாடி ஒன்றியத்தில்வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு

புள்ளம்பாடி ஒன்றியத்தில்வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.;

Update:2023-01-11 00:17 IST

புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கம் கிராமத்தில் வட்டார அளவிலான நர்சரி கார்டனில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி, புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டும் பணி, சரடமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் தேவநாதன் ஆய்வு செய்தார். மேலும் வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெறும் கணக்கெடுப்பு பணியினை ஆய்வு செய்தார். சிறுகளப்பூர்-காணகிளியநல்லூர் கிராமங்களுக்கு இடையே உள்ள சாலை, ரெட்டிமாங்குடி-பெருவளப்பூர் கிராமங்களுக்கு இடையே உள்ள சாலை உள்ளிட்ட பழைய சாலைகளை சீரமைக்கும் பணிகளையும், புதிய சாலைகள் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், மாதவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜமாணிக்கம், தனலட்சுமிரவி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்