மல்லசமுத்திரம் அருகே பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update:2022-10-23 00:07 IST

மல்லசமுத்திரம்:

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மல்லசமுத்திரம் அருகே உள்ள பாலமேட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்க நிர்வாகி மனோகரன் தலைமை தாங்கினார். நிர்வாகி பூபதி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் பால் பணப்பாக்கி, ஊக்கத்தொகை, போனஸ் உள்ளிட்டவைகளை தீபாவளிக்கு முன்பாகவே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும்வலியுறுத்தப்பட்டது.

இதில் மாவட்ட துணைத்தலைவர் ஆதி நாராயணன், மாவட்ட குழு உறுப்பினர் ஜோதி, மாவட்ட பொருளாளர் தங்க ரத்தினம், உறுப்பினர் ராயப்பன் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் சங்க உறுப்பினர்செல்வம் நன்றி கூறினர்.

மேலும் செய்திகள்