சென்னையில் டாஸ்மாக் கடைகள் இரு தினங்கள் மூடல்

ஜனவரி மாதத்தில் இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என சென்னை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.;

Update:2026-01-15 06:19 IST

சென்னை,

சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை விதிகள் மற்றும் தமிழ்நாடு மதுபானம் விதிகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் (எப்.எல்.1) சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், எப்.எல்.2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், எப்.எல்.3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள், எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ, எப்.எல்.11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் நாளை (வெள்ளிக்கிழமை) திருவள்ளுவர் தினம் மற்றும் 26-ந்தேதி (திங்கட்கிழமை) குடியரசு தினம் ஆகிய தினங்களில் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்