தன்பாத்- கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை மறுநாள் முதல் ரத்து

மறு அறிவிப்பு வரும் வரை திடீரென ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.;

Update:2026-01-15 07:44 IST

கோவை,

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து வாரந்தோறும் சனிக்கிழமை கோவைக்கு செல்லும் தன்பாத்- கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண் 03679) சேலம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை திடீரென ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை புறப்படும் கோவை- தன்பாத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:- 03680) வருகிற 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் மறுஅறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது என்று சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்