சேரிபாளையத்திற்கு கூடுதல் பஸ் இயக்கக்ேகாரி மீண்டும் போராட்டம்- மாணவ-மாணவிகள் அறிவிப்பு
சேரிபாளையத்திற்கு கூடுதல் பஸ் இயக்கக் ேகாரி மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று மாணவ-மாணவிகள் அறிவித்துள்ளனர்.;
கிணத்துக்கடவு
சேரிபாளையத்திற்கு கூடுதல் பஸ் இயக்கக் ேகாரி மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று மாணவ-மாணவிகள் அறிவித்துள்ளனர்.
கூடுதல் பஸ் இயக்க வேண்டும்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சேரிபாளையத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு செல்ல கிணத்துக்கடவிலிருந்து ஒரு அரசு பஸ் மற்றும் தனியார் பஸ் இயக்கப்பட்டு வந்தது. அந்த தனியார் பஸ் கொரோனா தொற்று அதிகமான நேரத்தில் நிறுத்தப்பட்டதால் சேரி பாளையம் பள்ளிக்கு செல்லும் நேரத்திற்கு தற்போது ஒரே ஒரு அரசு பஸ் மட்டும் இயக்கப்படுகிறது. காலையில் 8.15 மணிக்கு கிணத்துக்கடவிலிருந்து சேரிபாளையத்திற்கு நல்லட்டி பாளையம் பட்டணம் வழியாக ஒரே ஒரு பஸ் மட்டும் சேரி பாளையம் செல்வதால் இந்த அரசு பஸ் எப்போதும் கடும் கூட்ட நெரிசலாக காணப்படும். இதனால் அவதிப்பட்ட மாணவர்கள் பொதுமக்கள் கடந்த 1-ந்தேதி, 13-ந்தேதி ஆகிய 2 முறை அரசு பஸ்சை சிறைபிடித்து கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், மாணவர்களிடம் போலீசார், போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றனர்.
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
இதுகுறித்து போலீசார் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து 2 வாரத்திற்கு மேலாகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பட்டணம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் பஸ்சில் ஏறுவதற்கு இடம் இல்லாததால் ஆத்திரமடைந்தனர். இதையடுத்து மாணவர்கள் பள்ளிசெல்லாமல் பெற்றோர்களுடன் கிணத்துக்கடவு போலீஸ்நிலையம் வந்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம் கூடுதல் பஸ்கேட்டு முறையிட்டதோடு பரபரப்பு புகார் தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
மறியல் போராட்டம்
போராட்டம் நடத்தி 2 வாரம் ஆகியும் பொள்ளாச்சி போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த பாடில்லை. இரண்டு வாரத்திற்கு முன்பு நடைபெற்ற போராட்டத்தின்போது 2 நாட்களில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சென்றனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் எங்கள் கிராமங்களில் இருந்து சேரிபாளையம் அரசு பள்ளியில் படிக்க செல்லும் மாணவர்கள் கூடுதல் பஸ் வசதி இல்லாததால் பள்ளிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் விரைவில் தாமரைக்குளத்தில் கோவை- பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் மாபெரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். இதுகுறித்து போலீசார்கூறுகையில், பொள்ளாச்சி போக்கு வரத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். உறுதியாக மாணவர்கள் பள்ளிக்கு செல்ல பஸ்வசதி ஏற்படுத்தப்படும் என்றனர்.