மக்கள் தொடர்பு முகாம்: 95 பயனாளிகளுக்கு ரூ.20¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

மக்கள் தொடர்பு முகாமில் 95 பயனாளிகளுக்கு ரூ.20¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.;

Update:2023-10-13 01:40 IST

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகாவுக்குட்பட்ட பிராஞ்சேரி, விழப்பள்ளம் கிராமத்திலுள்ள புனித செபஸ்தியார் ஆலய வளாகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சார்பில் 95 பயனாளிகளுக்கு ரூ.20¾ லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. பரிமளம், ஜெயங்கொண்டம் ஒன்றிய குழுத்தலைவர் ரவி சங்கர், பிராஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ராணி, ஒன்றிய குழு உறுப்பினர் லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்