பேரிடர் விழிப்புணர்வு சுவரொட்டி வெளியீடு

பேரிடர் விழிப்புணர்வு சுவரொட்டி வெளியீடு;

Update:2023-02-24 00:15 IST

திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் பேரிடர் மீட்பு பிரசார சுவரொட்டியை நகரசபை தலைவர் கவிதா பாண்டியன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பிரதான்பாபு ஆகியோர் வெளியிட்டனர். அப்போது நகரசபை தலைவர் கூறுகையில், 'தீ விபத்து, மின்னல், வெள்ளம், புயல் போன்றவற்றில் இருந்து மக்களையும், பொதுச்சொத்துகளையும் பாதுகாப்பது மிகுந்த சவாலாக உள்ளது. எனவே பேரிடர் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களை மக்களிடம் கொண்டு செல்வது மிகுந்த பயனளிக்கும், மக்களுக்கும், அலுவலர்களுக்கும் பேரிடர் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்' என்றார். நிகழ்ச்சியில் நகராட்சி மேலாளர் சிற்றரசு, பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தொடர்ந்து பேரிடர் விழிப்புணர்வு சுவரொட்டி பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்