அஞ்சலி வரத ஆஞ்சநேயருக்கு புஷ்பாஞ்சலி
அனுமந்த் ஜெயந்தியையொட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயருக்கு புஷ்பாஞ்சலி நடந்தது.;
சின்னாளப்பட்டி மேட்டுப்பட்டியில் அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 17 அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளது. அனுமந்த ஜெயந்தியையொட்டி, ஆஞ்சநேயர் சிலைக்கு ஆயிரம் லிட்டர் பால் ஊற்றி அபிஷேகம் நடந்தது. மேலும் 108 இளநீர் அபிஷேகம் மற்றும் 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பட்டுசாத்தி தங்க கவச சேவை அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்பிறகு இரவு 8 மணி அளவில் செவ்வந்தி, மல்லிகை, பிச்சிப்பூ, மரிக்கொழுந்து, ரோஜா உள்ளிட்ட 7 வகையான உதிரிப் பூக்களை தூவி புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.