12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

என்.வெள்ளாளப்பட்டியில் 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.;

Update:2022-12-19 00:15 IST

ஊத்தங்கரை

ஊத்தங்கரை அருகே உள்ள என்.வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். விவசாயி. இவரது தென்னந்தோப்பில் 12 அடி நீள மலைப்பாம்பு இருந்தது. இதுகுறித்து அவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிராமமக்கள் வந்து மலைப்பாம்பை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். பின்னர் வனத்துறையினர் மலைப்பாம்பை கல்லாவி காப்புக்காட்டில் விட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்