எஸ்.புதூர்
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான செட்டிகுறிச்சி, புழுதிபட்டி, குன்னத்தூர், தர்மபட்டி, கே.புதுப்பட்டி, கிழவயல், கரிசல்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டது.
இந்த நிலையில் இரவு திடீரென இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலையோரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.