ராஜீவ் காந்தி கொலை வழக்கு: விடுதலையான சாந்தனின் இலங்கை பாஸ்போர்ட் திரும்ப ஒப்படைப்பு...!

சாந்தனின் இலங்கை பாஸ்போர்ட்டை திருப்ப ஒப்படைக்க சென்னை முதலாவது கூடுதல் அமர்வு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-12-21 11:15 GMT

சென்னை,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனிடம் இருந்து சிபிஐ அதிகாரிகள் பாஸ்போர்டை பறிமுதல் செய்திருந்தனர். இந்த பாஸ்போர்ட் சென்னை அமர்வு கோர்ட்டில் சமர்பிக்கப்பட்டது. சமீபத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது.

இந்த நிலையில் விடுதலையான சாந்தன் தனது பாஸ்போர்ட் 1995-ம் ஆண்டே காலாவதியாகிவிட்டதால், அதை புதுப்பிப்பதற்காக திருப்பி தரவேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை முதலாவது கூடுதல் அமர்வு கோர்டில் ஏற்கெனவே அவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி தங்கமாரியப்பன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதற்காக திருச்சி முகாமில் இருந்த சாந்தன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சாந்தனின் பெயர் உள்ளிட்டவற்றை சரிபார்த்த பின்னர் பாஸ்போர்டை திருப்பி கொடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், கோர்ட்டுக்கு பஸ்போர்ட் தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்த சாந்தனிடம் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. 


Full View


Tags:    

மேலும் செய்திகள்